ஞானசார தேரர் மீதான அவமதிப்பு வழக்கு நாளை, கைது செய்யப்படுவரா?

260 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விஜித் கே. மலகொட, பி. பத்மன் ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில், இந்த வழக்கு, விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்குள் வைத்து, ஞானசார தேரர் நடந்துகொண்டதாகக் கூறப்படும் முறை, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமா என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தை, ஹோமாகம நீதவான் கோரியிருந்தார்.

அத்தோடு, ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமாயின், அவர் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், நீதவான் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.