மன்னாரில் புதிய முகாம் அமைக்கும் கடற்படையினர் – சாள்ஸ் எம் பி

489 0
மன்னார் மாவட்டம் தாழ்பாடு , ஓலைத்தொடுவாய் , நடுக்குடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் வகையில் கடற்படையினர் தற்போது பாரிய கடற்படைத் தளம் ஒன்றினைப் புதிதாக அமைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டுகின்றார்.
மன்னார் மாவட்டத்தின் தாழ்பாடு கடற்கரையில் கரைவலைத் தொழில் புரியும் மீனவர்கள் தமது உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரதான வீதியினை அபகரித்து வீதியின் இருமருங்குமாக 10 தொடக்கம் 15 ஏக்கர் நிலப்பரப்பினை உள்ளடக்கிய வகையில் தற்போது ஓர் பாரிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்படும் முகாம் பகுதியில் நீண்ட காலமாக சிறு சோதனைச் சாவடியே இருந்த்து. அதனால் அதனைத் தாண்டி மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் போக்குவரத்துச் செய்தனர். ஆனால் தற்போது கடற்படையினர் குறித்த வீதியினை ஆக்கிரமித்து இவ்வாறு வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுபடுவதனால் அங்கே தொழிலில் ஈடுபடும் நூற்றுக் கணக்கான மீனவர்கள் தமது உற்பத்தியை நகருக்கு எடுத்துச் செல்ல பயணித் 2 கிலோ மீற்றர் தூரத்திற்காக 15 கிலோ மீற்றர் தூரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கடற்படைநினர் தற்போது அமைக்கும் முகாமில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் கடற்படைநினரின் மற்றுமோர் படைமுகாம் உள்ளது. அந்த நிலையில் இப்பகுதியினையும் அபகரிக்க வேண்டிய  தேவையே கிடையாது. இருப்பினும் இவ்வாறு நிலங்களை அபகரித்து தொடர்ந்தும் எமது மக்களின் வாழ்வியலைக் கேள்விக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளிலேயே படையினர் தற்போதும் ஈடுபட்டுள்ளனர் என்பதனையே இவ்வாறான செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறான பிரதேசங்களில் பொது மக்களோ அல்லது ஓர் பொது அமைப்போ இவ்வாறான இடங்களில் ஓர் பொது விடயத்திற்கான சிறிய கட்டிடத்தினைக் கட்ட முயன்றாலே தடைபோட 35 அமகப்புக்கள் முண்டியடிக்கும் நிலையில் சட்டங்கள் அனைத்தும் சாதாரண மக்களைக் கட்டுப்படுத்தவே பயன்படுகின்றன.
இது தொடர்பில் கடற்படைத் தளபதியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
அது ஓர் தேசிய பாதுகாப்பு கருதிய விடயம் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்து வேண்டுமானால் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுங்கள் எனப் பதிலளிக்கின்றார்.  படையினர் தொடர்ந்தும் சர்வாதிகாரப்போக்குடனேயே தொடர்ந்தும் நடக்கின்றனரே அன்றி இந்த நாட்டில் நல்லாட்சி என்பது சந்தேகத்தினையே ஏற்படுத்துகின்றது.