வேலையில்லா பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை
நிரந்தர வருமானமும், தொழில்வாய்ப்பும் இன்றி வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் மனவிரக்தியில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர். இச் சம்பவம் காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் குமரகோட்டம் கோண்டாவில் பகுதியினை சேர்ந்த உலகநாதன் வசந்தகுமார்(39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் உறவினர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். சடலத்தினை மீட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் பாரப்படுத்தப்பட்டது.