இந்தியா-சீனா படைகள் லடாக் எல்லைப் பகுதியில் சந்தித்து கொண்டனர். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பினரும் உறுதி மேற்கொண்டனர்.இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படையினர் அவ்வவ்போது எல்லைப் பகுதியில் சந்தித்து பேசுவதும் கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்வதும் வழக்கம்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படையினர் சந்தித்துப் பேசினர். இது குறித்து பாதுகாப்பு துறை செய்திதொடர்பாளர் கூறுகையில்:-
இரு அரசாங்கங்களை சேர்ந்தவர்களும் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு பரஸ்பர உணர்வை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
சீன மக்கள் விடுதலை ராணுவ தினத்தை முன்னிட்டு சடங்கு ரீதியான எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் சந்திப்பு கிழக்கு லடாக்கில் உள்ள சுசூல் பகுதியில் நடைபெற்றது.
இந்திய ராணுவ குழுவினர் உயர் அதிகாரி நவ்நீட் குமார் தலைமையிலும், சீனக் குழுவினர் மூத்த கலோனல் பேன் ஜன் தலைமையிலும் பங்கேற்றனர். இவ்வாறு தெரிவித்தார்.