யாழ்ப்பாண நகரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமாள் கோவில் மற்றுல் சண் மார்க்கா பாடசாலைகளில் இருந்து 200 மீற்றர் தொலைவில் ஓர் புதிய மதுபானச்சாலைக்கான ஒப்புதலை வழங்கியுள்ளார் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர்.
யாழ்ப்பாணம் வெலிற்ரன் சந்திக்கு அண்மையில் புதிதாக ஓர் ரெஸ்ரூரண்ட்டிற்கான ஒப்புதல் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ரெஸ்ரூரண்ட்டில் இருந்து யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் 500 ஆண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோவில் 250 மீற்றர் தூரத்திலும் 100 வருட சரித்திரம் கொண்ட சன்மார்க்கா வித்தியாலயம் பாடசாலை 200 மீற்றர் தூரத்திலும் உள்ள நிலையிலும் குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மதுச்சாலைகளை ஒழிப்போம் புதிய அனுமதிகள் வழங்கப்படமாட்டாது எனக் கூறும் அரசு இவ்வாறான இரகசிய அனுமதிகளைத் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. குடாநாட்டில் உள்ள மதுபானச் சாலைகளை குறைப்பதற்கும் சட்ட விதிமுறைக்கான எல்லைப்பரப்பிற்குள் உள்ளவற்றினை தடை செய்ய அரச அதிபர் மற்றும் ஆளுநர் மும்முரமாக செயல்படும் நிலையில் மதுவரித் திணைக்களம் பி்தேச செயலாளர்கள் இவ்வாறான திருட்டு அனுமதி வழங்குவதாக அப்பகுதி மக்கள் கடும் விசணம் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகள் ஆலயங்களில் இருந்து 500 மீற்றர் தூரப்பிரதேசத்திற்குள் புதிய அனுமதிகள் வழங்க கூடாது என மதுவரித் திணைக்களத்தின் புதிய அனுமதிகள் தொடர்பான சட்ட இலக்கம் 902 கூறும் நிலையில் இந்த அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் தயானந்தாவிடம் கேட்டபோது ,
குறித்த ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 500 மீற்றர் 300 மீற்றர் என சட்டம் ஒன்றும் கிடையாது. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள் அதனை பிறகு பார்க்கலாம் என பொறுப்பற்றவித்த்தினில் பதிலளித்தார்.