பாக். ராணுவ தளபதி – அமெரிக்க தூதர் சந்திப்பு!

328 0

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைய வேண்டும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன், அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலே சந்தித்து பேசியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைய வேண்டும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன், அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலே சந்தித்து பேசியுள்ளார்.

சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீவிரவாதத்திற்கு எதிராக போராட அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைய வேண்டும் என பேசியிருந்தார். இதனையடுத்து, நேற்று பாகிஸ்தானில் ராணுவ தளபதி ஜாவீத் பஜ்வாவை அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலே சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கடந்த 18-ம் தேதி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மண்ணில் இடமில்லை என ஜாவீத் பஜ்வா கூறியிருந்ததற்கு டேவிட் ஹாலே பாராட்டு தெரிவித்தார். மேலும், டிரம்பின் சவூதி பேச்சு குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் இருக்கும் தாலிபான்களை ஒடுக்குவது குறித்தும் இருவரும் சில முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதாக அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.