ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்;று, கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

519 0

இலங்கைக்கான உத்தியோக விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற இடமாகவும், உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் அதிகளவிலேயே காணப்படுகின்ற பகுதியான கிளாலி முதல் நாகர்கோவில் வரையான பகுதிகளில் சர்வதேச நிதியுதவியுடன் கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்; முகமாலைப் பகுதியில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் டாஸ் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்pனை மேற்கொண்டுள்;ள ஜப்பானிய தூதரக அதிகாரி மிசாகோ தகஜம் மற்றும் இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்த நிரோசா வெல்கம ஆகியோர் இன்று மாலை முகமாலைப் பகுதிக்குச் சென் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன், கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை முகாமாலை பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், இந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் வெடிபொருட்களால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும், கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.