உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்- பி.சுரேஸ் (காணொளி)

477 0

உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகர அமைச்சின் மேலதிக செயலாளர் பி.சுரேஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போது இவ்வாறு ஆலோசனை கூறியுள்ளார்.

யாழ். நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு உலக வங்கியினால் 8ஆயிரத்தி 250மில்லியன் ரூபாய் செலவில் மேற்க்கொள்ளபட இருக்கின்றது. யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் இரண்டரை வருட காலத்திற்குள் முடிவுறுத்தப்பட வேண்டும். எனவே இதற்காக உடனடியாக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட் Nவுண்டும்என சுட்டிக்காட்டினார்.

பொறியியலாளர் உட்பட உத்தியோகத்தர்கள் வேவைக்கு பற்றாக்குறையாக இருப்பதையும் சுட்டிக்காட்டியதுடன் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு மக்கள் பிரதி நிதிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு உலக வங்கியால் ஒதுக்கப்பட்ட  8ஆயிரத்தி 250மில்லியன் ரூபாவை குறித்த காலத்திற்குள் செலவு செய்து வேலைகளை நிறைவேற்றுவதன் மூலமே மேலதிக பணத்தினையும் உலக வங்கியிடம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இன்றைய யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கு யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினராகிய சிவஞானம் ஸ்ரீதரன், பி.சரவணபவன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினர், ஏனைய திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.