இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் “பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி” எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் குறித்த செயலமர்வு நடைபெற்றது.
ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட மக்கள் வெவ்வேறு பிரிவினராக பிரிந்து வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய கலாசார முறைக்கேற்ப செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகின்ற நிலைகள் தொடர்பாகவும் இன்றைய செயலமர்வில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச் செயலமர்வின் பயிற்சியாளராக அரச கொள்கை, சமூக அபிவிருத்தி கொள்கை நிறுவன முகாமைத்துவ ஆய்வாளரும், ஆலோசகருமான எஸ்.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.