மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

299 0

இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிழமை தோறும் நடாத்தப்படும் கிளினிக்குகள் நடைபெறவில்லை எனவும் அவசர சிகிச்சைகளும் உள் நோயாளர் பிரிவும் வழமைபோன்று இயங்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை தமது வேலை நிறுத்தம் குறித்து மன்னார் வைத்தியசாலை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கடந்த கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை முடக்க எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு ஏதிராகவும் தமது சங்கத்தின் தலைவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்தும் நடாத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.