யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு கிணறு, மற்றும் புதிய துவிசக்கரவண்டி அன்பளிப்பு (காணொளி)

317 0

 

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டை சேர்ந்த கதிர்செல்வன் கருணநதி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இக் கிணறு புலம் பெயர் நாட்டில் உள்ள அன்பர்களின் நிதி அனுசரைணையுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த மு.பரமேஸ்வரி என்பவரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக புன்னை நீராவியடியை சேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக புதிய துவிசக்கரவண்டி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சந்திரன் அஜித்குமார் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது இரு கைளையும் மணிக்கட்டுடன் இழந்துள்ளதுடன் ஒரு கண்ணும் முற்றாக பார்வையிழந்துள்ளார். தமது பிள்ளைகள் துவிசக்கரவண்டி இல்லாது கற்றல் செயற்பாட்டை தொடர்வதில் பல இடர்கள் உள்ளதாக, வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை கருத்தில் கொண்டு வட்டுக்கோட்டை இந்து வலிபர் சங்கத்தின் ஊடாக புதிய துவிசக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.