சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் குறித்து விசாரணை

232 0

சவுதி அரேபியாவில் பலவந்தமாக இலங்கைப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படும் சம்பவம் குறித்து உடனடியாக ஆராயுமாறு, வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரல பணிப்புரை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவருக்கே அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

பணிப் பெண்ணாக சென்ற தம்புள்ளையைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
சிறுநீரகத்தை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.