அமைச்சரவை மாற்றங்களால் ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் பதவிகள் இடமாற்றப்பட்டன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய விளக்கங்களை தொடர்ந்தே ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க சர்வதேச தலைவர்களை சந்திக்க வேண்டும். அவர் எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக வரலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ஏற்க மறுத்திருந்ததாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரவி கருணாநாயக்கவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளளர்.