திருகோணமலை, தம்பலகாமம், தெலியன் கலப்பு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞனை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த இளைஞன் கடற் தொழிலுக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
காணாமல் போயுள்ள இளைஞனை தேடும் நடவடிக்கையில் கிராமமக்களும் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.