வைகை ஆற்றை சுத்தம் செய்யக்கோரி வழக்கு

365 0

201608021547516639_high-court-madurai-branch-notice-to-5-collector-for-vaigai_SECVPFவைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வைகை ஆற்றை சுத்தம் செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-வைகை ஆற்றினால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பயன்பெற்று வரும் நிலையில், ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் தொடர்ந்து மாசடைகிறது. இது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் புகார் தொடர்பாக பதிலளிக்கும்படி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.