முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ததால் 7 பேர் பணிநீக்கம்!

376 0

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் செய்­த­வர்­களை வவு­னி­யா­வில் இயங்­கும்தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த நிறு­வ­னம் ஒன்று வேலை­யில் இருந்து இடை­நி­றுத்­தி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பணி­நீக்­கி­ய­தற்­கான கார­ணம் தற்­போது கூற முடி­யாது என்று அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அந்த நிறு­வ­னத்­தில் முல்­லைத்­தீவு கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 7 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். அவர்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை தாம் பணி­பு­ரி­யும் அலு­வ­ல­கத்­தில் பணி­நே­ரம் நிறை­வ­டைந்த பி்ன்னர் மாலை 5.30 அள­வில் மே 18 நினை­வேந்­தல் நிகழ்வை நினை­வு­ கூர்ந்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதை அறிந்த குறித்த நிறு­வன தலைமை அதி­கா­ரி­கள் மறு­நாள் குறித்த 7 பேரை­யும் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்து விசா­ரணை செய்­யு­மாறு கோரி­யுள்­ள­னர். அவர்­கள் பொலி­ஸா­ரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.அதன்­பின்­னர் 7 பேரும் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டமை தொடர்­பில் நிறு­வ­னத்­தி­ன­ரி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தற்­கான கார­ணத்­தைத் தற்­போது கூற­மு­டி­யாது. நாளை கூற முயற்­சிக்­கி­றோம் என்­ற­னர்.