தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உற்சாகமாக அந்நாட்டின் பாரம்பரிய வாள் நடனம் ஆடினார்.
தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உற்சாகமாக அந்நாட்டின் பாரம்பரிய வாள் நடனம் ஆடினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார். அவருடன் மனைவி மெலினா டிரம் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் சென்றுள்ளனர். நேற்று, அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், டிரம்ப் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், முபாரா பேலஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் அந்நாட்டின் பாரம்பரிய நடனமாக அறியப்படும் ’அர்தா’ எனும் வாள் நடனம் ஆடினார்.
சவூதி மன்னர் குடும்பத்தினர் புடைசூழ டிரம்ப் வெகு உற்சாகமாக நடனமாடினார். சவூதி சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், இஸ்ரேல் செல்லும் டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசுகிறார். சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் தனது சொந்த நாட்டுக்கு அவர் திரும்புகிறார்.