பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களிற்கான ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது,
பளை மத்திய கல்லூரியில் இடம்பெற்றுவரும் குறித்த நடமாடும் சேவையினை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர ஆபுவர்த்தன ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா, வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றய நடமாடும் சேவையில் 2 தம்பதியினருக்கு பிந்திய திருமண பதிவு இடம்பெற்றது. அவர்களிற்கான சாட்சி பத்திரத்தில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் கையொப்பமிட்டமை குறிப்பிட தக்கதாகும்.
தொடர்ந்து குறித்த பிததேசத்தில் உள்ள மக்களிற்கான அரச ஆவணங்களை பெற்றுக்கொள்ளல், சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்டவற்றிற்கான நடமாடும் சேவை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறுிப்பிட தக்கதாகும்.