கிளிநொச்சி இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

348 0
கிளிநொச்சி இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபுட்டுவரும் மக்களை இன்று திமழ் தேசிய மக்கள் முன்னணி சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தது.
இன்று பிற்பகல் திமழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியுார் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார்
தமது பூர்வீக மண்ணில் குடியேறுவதற்காக மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
இவ்வாறு மக்கள் போராட்டத்தினாலே தமது உரிமைகளை பெற்ற வருகின்றார்களேயன்றி எவரும் பெற்றுக்கொடுக்க தயாராக இல்லை. இந்நிலையில் மக்கள் வீதியில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றயதினம் நாட்டின் பிரதமரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இருவரும் ஒரே வானூர்தியில் பயணித்துள்ளனர். இவ்வாறு மிக நெருக்கமான உறவை வைத்திருக்கும் அவர்கள் மக்களிற்காக எதையும் பேசியதாக தெரியவில்லை.
கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் தனது மகளின் பிறந்தநாளிற்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறு மக்களை வீதிகளிற்கு கொண்டுவந்த அரச தலைவர்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவர்கள், வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை என்றும் சிந்தித்தது கிடையாத. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வெறுமனு மக்களின் வாக்குகளிற்காக அவர்களின் வீடுகளிற்கு செல்பவர்கள், பின்னர் மக்களை மறந்து தமது நெருக்கமான உறவை அரச தலைவர்களுடன் கொண்டுள்ள உண்மையை மக்கள் உணர்ந்து எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.