5 கட்சிகள் தீர்மானம்

301 0

இலங்கையில் பயங்கரவாதம் நில வாத நிலையில் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்றது. எனவே பயங் கரவாத தடை சட்டத்தை நீக்க வேண் டும் என அழுத்தம் கொடுப்பதற்கும் அதற்காக தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் காட்சிகள் மற்றும் தென்னி லங்கை இடதுசாரி கட்சிகளின் ஒத்து ழைப்பை கோருவதற்கு தீர்மானிக்க ப்பட்டுள்ளது.

யாழ்.நகரில் நேற்று காலை கூடிய 5 கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்து ள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலொ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி) ஆகியன கலந்து கொண்டிருந்தன.

மேலும் தமிழரசு கட்சி சார்பில் கட்சி யின் தலைவர் மாவை சேனாதிராஜா மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரும், ரெலொ சார்பில் கட்சி யின் செயலாளர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சிறீகாந்தா, மாகா ணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம், விந்தன் கனகரட்ணம், மற்று ம் ஹென்றி மகேந்திரன் ஆகியோரு ம் புளொட் சார்பில் நாடாளுமன்ற உறு ப்பினர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் கட்சியின் தலை வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சுரேஷ் பிறேமசந்திரன், மற்று ம் ஈ.பி.ஆர்.எல்.எவ்( பத்மநாபா அணி) சார்பில் சுகு சிறீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக ரெலோ அ மைப்பின் செயலாளர் சிறீகாந்தா த கவல் தருகையில், ரெலொ அமைப்பி ன் சார்பில் இந்த கலந்துரையாடல் ஒ ழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் பிரதானமாக இலங் கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தேவையற்றது.
இலங்கையில் பயங்கரவாதம் நில வாத நிலையில் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்றது. எனவே பயங் கரவாத தடை சட்டத்தை நீக்ககோரும் நிலையில் நடைமுறையில் உள்ள ப யங்கரவாத தடைசட்டத்தை காட்டிலும் மோசமான சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டமே தேவையில்லை அந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என தீர்மானித்து ள்ளோம். மேலும் நடைமுறையில் உள் ள பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்குவதற்கு சகல அரசியல் கட்சிகளி னதும் ஒத்துழைப்பை கோருவதற்கு ம் தீர்மானித்துள்ளோம்.

இதனடிப்படையில் 2ம் கட்டமாக மலையக அரசியல் கட்சிகளுடனும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். அடுத்து 3ம் கட்டமாக தென்னிலங் கையில் உள்ள தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு கட்சிகளுடன் பேசிவதற் கு தீர்மானித்துள்ளோம்.

இந்த கலந்துரையாடலுக்கு தமிழ்தே சிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ ர் விடுதலை முன்னணி ஆகியவற்று க்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் கள் வரவில்லை ஆனால் அவர்களை யும் அழைப்போம் என்றார்.