திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் – இந்திய வான்படை தளபதி உத்தரவு

369 0

திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தாக்குதலுக்கு தயாராகுமாறு இந்திய வான்படை தளபதி தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹிந்து செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லை மீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அத்துடன் எல்லையில் தீவிரவாதிகளும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது தவிர, காஷ்மீர் இளைஞர்களையும் கலவரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தூண்டி வருவதனால் காஷ்மீர் பிரதேசத்தில் அமைதி சீர்குலைந்துள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான காரணங்களால் இந்திய, பாகிஸ்தான் எல்லை பிரதேசங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.