பெரும்பாலும் நாளைய தினம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றத்துடன் மக்கள் எதிர்ப்பார்க்கும் புது பொழிவுடன் நாடு முன்நோக்கிச் செல்வதற்கான தீர்மானங்களை ஜனாதிபதி மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பினையடுத்து இன்று இரவு பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியினர் ஒன்று கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.