தேர்தலை நடத்த ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய

309 0

தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக் குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையின் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய செயற்பாடுகள் ஆரம்பிக்கபபட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை.

அத்துடன் தேர்தலை தீர்மானிப்பதற்கான அதிகாரம் உலகில் எந்த ஒரு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இல்லை எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.