ஸ்ரேலிய சுற்றுலாதுறை அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

232 0

சுற்றுலாதுறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அழைப்புக்கு இணங்க ஸ்ரேலிய சுற்றுலாதுறை அமைச்சர் யாரிவ் லிவின் (Yariv Levin) இந்த வருட இறுதியினுள் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் இரு நாட்டு சுற்றுலாதுறை அமைச்சர்களும் சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேலிய சுற்றுலாதுறை அமைச்சரின் வருகையினை அடுத்து மேலதிக ஸ்ரேலிய சுற்றுலாதுறையினர் இலங்கைக்கு வருகை தரக்கூடிய ஏதுநிலை இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர இலங்கை மற்றும் ஸ்ரேலுக்கு இடையே நேரடி ஒழுங்குப்படுத்தப்பட்ட வானூர்தி சேவைகளை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.