திருச்சி அருகே வாளாடி – பொன்மலை இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வருகிற 23-ந்தேதி குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 15 ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி அருகே உள்ள வாளாடி-பொன்மலை இடையே இருவழி ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வருகிற 23-ந்தேதி ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதில் குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 15 ரெயில்களின் போக்குவரத்து மாற்றப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவழி மார்க்கத்திலும் (எண். 16127, 16128) விருத்தாச்சலம், சேலம், கரூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தஞ்சை வழியாக இயக்கப்படுவதால் 1 மணி 25 நிமிடம் தாமதமாக விழுப்புரம் வந்தடையும்.
சென்னை எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16853) எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்கு பதிலாக காலை 10.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 7 மணிக்கு சென்றடையும்.
திருச்சி-ஹவுரா விரைவு ரெயில் (12664) மாலை 4 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7 மணிக்கு இயக்கப்படும்.சென்னை எழும்பூர் – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) ஸ்ரீரங்கத்தில் 30 நிமிடம் வரை தாமதமாகும்.
வாரணாசி- ராமேசுவரம் விரைவு ரெயில் (15120) விழுப்புரம்- திருச்சி இடையே 60 நிமிடம் நிறுத்தப்படும்.திருச்சி-லால்குடி ரெயில் (76804) முழுவதும் ரத்து. மயிலாடுதுறை- திருநெல்வேலிரெயில் (56821, 56822) திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
மயிலாடுதுறை -திருச்சி ரெயில் (56811, 56812) திருவெறும்பூர் வரை மட்டுமே செல்கிறது.
கடலூர் துறைமுகம்- திருச்சி இடையிலான ரெயில் (76841, 76842) லால்குடி வரை இயக்கப்படும். விருத்தாசலம் – திருச்சி இடையிலான ரெயில் (76845, 76846) ஸ்ரீரங்கம் வரை இயக்கப்படும்.
மன்னார்குடி-திருச்சி ரெயில் (76805) திருவெறும்பூர் வரை இயக்கப்படுகிறது.நாகூர்-திருச்சி ரெயில் (76851) திருவெறும்பூர் வரை இயக்கப்படும். காரைக்கால்- திருச்சி ரெயில் (56711) பகல் 12.15 மணிக்கு பதிலாக 2.15 மணிக்கு புறப்படுகிறது.திருச்சி- மன்னார்குடி ரெயில் (76806) மாலை 5.30 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கு புறப்படுகிறது.