ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
திருமணம் என்றால் பெண் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு பணம், நகை, டூ வீலர், கார் உள்ளிட்ட பொருட்களை வரதட்சணையாகக் கொடுப்பது வழக்கம். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகளின் தந்தை ஆம்புலன்ஸை வரதட்சணையாக கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம்புலன்ஸை பெற்றுக்கொண்ட மணமகன், தனது மாமனார் அளித்த இந்த பரிசு தனக்கு மட்டுமின்றி தனது கிராம மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். அவசர காலத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் ஆம்புலன்ஸை தனது தந்தை பரிசாக கொடுத்தது தனக்கு பெருமையாக உள்ளது என மணமகள் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மருமகனுக்கு திருமண வரதட்சனணயாக ஆம்புலன்சை மாமனார் பரிசாக அளித்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகின்றது.