ரெம்சன் வைரஸ் தாக்கத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை – வடகொரியா

255 0

உலகில் நூற்றுக்கும் அதிமான நாடுகளின் கணினிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ரெம்சன் (Remson) வைரஸ் தாக்கத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

ரெம்சன் (Remson) வைரஸ் தாக்கத்தின் காரணமாக சர்வதேச ரீதியில் பல நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் விவகாரம் குறித்து வடகொரியா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும், இந்த குற்றச்சாட்டுக்கும் தமக்கும் தொடர்பில்லை என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் பியோங்கியாங் தெரிவித்துள்ளார்.