அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்து

262 0

மத்திய கிழக்கு நாடுகளுக்கான தமது முதலாவது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள ட்ரம்ப், நேற்று அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் ஹஸீஸை (Salman bin Abdulaziz) நேற்றுக் காலை சந்தித்தார்.

இதன்போது 350 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களில் 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுத ஒப்பதந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

எட்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள ட்ரம்ப், பலஸ்தீன், பிரசல்ஸ், வத்திக்கான், சிசிலி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.