ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் தடுப்பு முகாமிற்கு செல்லும் அபாயம்

237 0

ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக தடுப்பு முகாமில் வைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்களை அவர்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கும் ஆபத்தும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இரகசியங்களை வெளியிட்டவரான எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு 2013 ஆம் ஆண்டில் ஹொங்கொங்கில் இலங்கையர்கள் அடைக்கலம் வழங்கினர்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒரு இராணுவ அதிகாரி ஒருவரும் மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகள் என ஐந்து பேரே எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையர்களின் அகதி அந்தஸ்து விண்ணப்பத்தை ஹொங்கொங் குடிவரவுத் திணைக்களம் நிராகரித்துள்ளது.

எனினும், குறித்த இலங்கையர்களின் விண்ணப்பங்களை புதிதாக சமர்பிக்க அவர்களின் சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அவர்கள் கனடாவிலும் குடியுரிமை கோரியுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் கவனம்செலுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.