வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சாரணிய வட மாகாண ஆணையாளர் திருமதி நீ.தர்மகுலசிங்கம் தலைமையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலய அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எம்,ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பெண்கள் சாராணிய சங்கத் தலைவி அணோஜா பெனாண்டோ, பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய பிரதி ஆணையாளர் விசாக்கா திலகரட்ண மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.இராதாகிருஸ்ணன், நல்ல தலைமைத்துவத்தை ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்கும் பொழுது உருவாக்க முடியும் எனக்குறிப்பிட்டார்.