வவுனியா ஒமந்தையில், சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதி சமர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னா, சமுர்த்தி பணிப்பாளர்களான அனுரகுனசேகர வெள்ளப்புள்ளி, கே.கே.எல்.சந்திர திலக, சி.டி.களுஆராச்சி, ஜே.கே.பத்மசிறீ, ரி.என்.சஞ்சிவ்வாணி, பிரதி பணிப்பாளர் ரணவீர, மற்றும் பிரதேச செயலாளர் கே.உதயராசா, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர், திருமதி பத்மரஞ்சன், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கடைத்தொகுதிகள் நான்கு மில்லியன் செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.