இலங்கைக்கு ஐp.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டதானது இனப்பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையினை மந்தப்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளது- ஞா.சிறிநேசன் (காணொளி)

326 0

 

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இலங்கைக்கு ஐpஎஸ்பி வரிச்சலுகை வழங்கப்பட்டதானது சிறுமபான்மை மக்களின் தேசியப் பிரச்சினையினை தீர்க்கும் நடவடிக்கையினை மந்தப்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளதாக குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கெனடி பிரான்சிஸ் மற்றும் கௌரவ விருந்தினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டார்.

விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

https://youtu.be/jvdKDfaajTY