மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில்….(காணொளி)

384 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்;ட வீட்டுப்பிரச்சினைகளை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.

ஹிறா பவுண்டேசன் மூலமாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட ஐம்பது வீடுகள் இதன்போது உரியவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டன.

மண்முனை, ஒல்லிக்குளம், பாத்திமாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்களுக்கே குறித்த வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.