முஸ்லிம்களுக்கெதிரான சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளுப்பட்டு வரும் அநீதிகளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துச் செல்லும் பொது வழிமுறை ஒன்று தொடர்பில் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டுவருவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையிலான இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எம்.எச். எம். நவவி, எஸ்.எம். மரிக்கார், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.