அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.