தூக்கம் குறைந்தால் கவர்ச்சி குறையும்: புதிய ஆய்வில் தகவல்

291 0

தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். எனவே தூக்கத்திற்காக பலர் படாதபாடு படுகின்றனர். அதற்காக மருந்து மாத்திரை சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பலகலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7½ மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர்.

அதே போன்று 4¼ மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது.

இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.