சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி

223 0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய தலையீடு குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியத்தின் முன்னாள் இயக்குநர் ரொபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுநலனைக் கருத்திற்கொண்டு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை அந்தநாட்டு அரசியல்வாதிகள் வரவேற்றுள்னர்.

எனினும், இந்த நடவடிக்கை தமது நாட்டை மோசமாக காயப்படுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.