ஐரோப்பிய நாடுகளின் உதவி தமக்கு தேவையில்லை – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

248 0
ஐரோப்பிய நாடுகளின் உதவி தமக்கு தேவையில்லை என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ தெரிவித்துள்ளார்.

தமது உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வாய்ப்புள்ளமையின் காரணமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதை மருந்து கொள்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளின் உதவி தமக்கு தேவையில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பெறப்படும் நிதி தொகையும் தமக்கு தேவையில்லை என்று அவர் மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.