இலங்கைக்கு இன்று முதல் மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை

215 0

இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 6 ஆயிரத்து 600 பொருட்களுக்கான வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆடை தொழில்த்துறையில் மாத்திரம் முதல் வருடத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 20 ஆயிரம் தொழில்வாப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.