உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் மணமகனை கடத்தி சென்ற காதலி

257 0

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் இருந்த மணமகனை துப்பாக்கி முனையில் காதலி கடத்தி சென்ற சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹமிப்பூர் குன்டேல்கண்ட் கிராமத்தைச் சேர்ந்த அசோக் யாதவ். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் அசோக் யாதவுக்கு அவரது பெற்றோர் வேறோரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். இதுபற்றி அவர் காதலியிடம் தெரிவிக்கவில்லை. சில நாட்களில் காதலியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் அசோக் யாதவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அவரது காதலிக்கு அசோக்யாதவுக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடப்பது தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் திருமண மண்டபத்துக்கு அசோக் யாதவின் காதலி 3 வாலிபர்களுடன் காரில் வந்தார். மணமேடையில் இருந்த அசோக் யாதவை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்றனர்.

இதைப்பார்த்த உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அசோக் யாதவையும், அவரை கடத்திய காதலியையும் தேடி வருகிறார்கள்.