வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான “Last Chance” இலத்திரனியல் காட்சியறையில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் குறித்த காட்சியறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீப்பரவல் ஒரு விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் பொலன்னறுவை பிரதேசத்தில் ஆற்றிய இனவாத உரையின் பின்னர், பாணந்துறை,கொஹிலாவத்தை, தோப்பூர் பிரதேசங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சில அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது