காத்தான்குடி – ஆரையம்பதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் மீது பிரிதொரு உந்துருளியில் வந்த 2 பேர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.