சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கணக்காய்வு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றுதல், பணிக்குழாமை முழுமைப்படுத்தல் போன்ற குறைபாடுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஆணைக்குழுக்களின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனையடுத்து பிரச்சினைகள் தொடர்பாக குறித்த துறையுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியாளித்தார்.