பிரதான செய்திகள் அமைச்சரவை மாற்றம் என்பது தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல-ஜி.எல். பீரிஸ்

290 0

அரசாங்கத்திலுள்ள தகுதியற்ற அமைச்சர்களை நீக்காமல் அமைச்சரவை மாற்றம் செய்யப் போவதாக தெரிவிக்கப்படுவதானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பான ஒரு நடவடிக்கையாகும் என மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

தகுதியற்ற, ஊழல்கள் மேற்கொள்ளும் அமைச்சர்கள் யார் என்பதை நாட்டுக்குத் தெரியும். இத்தகையவர்களுக்கு இன்னுமொரு அமைச்சை வழங்குவது பிரச்சினைக்குத் தீர்வல்ல. அரசாங்கம் பிரச்சினைகளை மூடிமறைக்க நடவடிக்கை எடுக்கப் போகின்றது எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குற்றம்சாட்டினார்.