அரசாங்கம் எந்த அரச சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை – ஹர்ஷ டி சில்வா

323 0

தற்போதைய அரசாங்கம் எந்த விதமான அரச சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய வில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவே 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியமைச்சர் என்ற ரீதியில் இராணுவ

தலைமையத்தை விற்பனை செய்தார்.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்பட்டவற்றை குறிப்பிட்டு காட்ட முடியும்.
அவ்வாறு தற்போதை அரசாங்கத்தினால் விற்பனை செய்யபடுவதாக கூறப்படுவதை குறிப்பிட்டு காட்ட முடியுமா? எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.