முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
மே18 விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. எஞ்சிய உறவுகளுடன் உடலிலும் உள்ளத்திலும் காயங்களைசுமந்த மக்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்களைாய் நெடுந்துயர்பயணமாய் வவுனியா நோக்கி துரத்தப்பட்டனர்.
முள்ளிவாக்கால் முற்றுகை முடிந்து. முள்ளி வேலி வாழ்க்கை முடித்து. நடைப்பிணங்களால் முள்ளிவாய்காலில் தம் உறவுகளுக்கு விளக்கேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
குருதி தோய்ந்த அந்த நாட்களை எண்ணி குமிறிக்கொண்டிருக்கிறார்கள். நாதியற்ற தமிழினம் நாலுகட்சிகளாய் ஆளுக்காள் அரசியல் நடத்தி சுடரேற்ற மும்மரமாய் உள்ளனர்.
ஆத்மாக்களின் ஆத்மார்த்தமான அந்த நாளில் அமைதிவணக்கம் செலுத்தி. ஆழ் மனதில் புதையுண்டு போன துயரினைஅந்த முள்ளிவாய்கால் வெளியில் கதறி அழுது கண்ணீரால் கரைந்து இதயங்களை இலேசாக்கிக் கொள்ளும் அந்த ஆத்மீகமானநாளில் அரசியல் வாதிகளே! அரசியல் செய்யாதீர்கள்!
உலகில் ஒடுக்கப்பட்ட இனங்கள் தங்கள் துயரமிகுந்த நாளில் ஒருமித்த குரலில் ஒரே கீதம்பாடி இறந்த உறவுகளின்நினைவாக நீண்ட நெடுங்காலமாக தமது வணக்கத்தினை செலுத்துவதை நாம் அறிவோம்.
தமிழினம் மட்டும் குறுகிய காலத்திலேயே கூறுபோட்டு நிற்கும் சூட்சுமம் தான் என்ன? பிரித்தாளும் தந்திரத்துக்குள் பிதிர்களும் விதிவிலக்கல்ல!