அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் !

344 0

இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் என, பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் கம்பஹா – மஹர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வேலைத் திட்டமொன்றில் இன்று அவர் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முல்லிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து பொன்சேகாவிடம் வினவிய போதே, அவர், மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் எனக் கூறிய போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்களுக்கு நினைவு கூற முடியும் எனவும் பொன்சேகா இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்காக தீபம் ஏற்றுதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என குறிப்பிட்ட அவர், சிவாஜிலிங்கம் பலம்மிக்க ஒருவர் இல்லை எனவும், அது குறித்து அவதானம் செலுத்தி காலத்தை செலவிடுவது அர்த்தமற்ற வேலை எனவும் கூறியுள்ளார்.