மீரிகம – பண்டார நாயக்க மகா வித்தியாலயத்தின் 31 மாணவர்கள் உணவு அல்லது குடிநீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் தர மாணவர்கள் சிலரே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வகுப்பறையில் திடீரென அசாதாரண நிலையை அடைந்த இவர்கள் காலை 8 மணியளவில் காலை உணவை உட்கொண்டுள்ளனர்.
பின்னர் குறித்த மாணவர்களின் சிலருக்கு அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் , மாணவர்களின் காலை உணவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் , குறித்த மாணவர்கள் காலை உணவின் பின் பாடசாலை உணவகத்தில் கை கழுவியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் குறித்த நீரை பாவித்த மற்றைய மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில் , காற்றின் அல்லது ஏதாவதொரு ஒவ்வாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.