தொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

328 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று 16.05.2017 உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே 18. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு படுகொலை செய்தது. எம் மக்களுக்கு நீதி வேண்டியே இக்கண்காட்சி நடத்தப்படுகின்றது.

தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை பல்லினமக்கள் வந்து பார்த்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அம்மக்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கி செயற்பாட்டாளர்கள் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இன்று 16.05.2017 கண்காட்சி நடந்த இடம் பல்லின மக்கள் கூடுதலாக வந்து போகும் இடமாக இருப்பதால் எங்கள் மக்களின் அவலநிலையை கண்காட்சி மற்றும் பதாகைகள் ஊடாக விளங்கிக் கொள்வதை பார்க்கக் கூடியதாக உள்ளது.

நாளைய தினம் 17.05.2017 அன்று தமிழின அழிப்பு கண்காட்சி டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் நடைபெறும்.

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்