மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசத்தை தற்போதைய தலைவர்கள் உதாசீனம் செய்து விடக்கூடாது என சர்வதேச அனர்த்தக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்திரமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். வடக்கு கிழக்கில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகும்.
அதே போன்று பலப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு அடங்கிய அரசியலமைப்பு ஒன்யை அடைவதற்கு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இடைநிலை நீதி நம்பிக்கைகளை புதுப்பித்தல், காணாமற் போனவர்களைப் பற்றிய அலுவலக நடவடிக்கை துரிதப்படுத்தல் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ,இராணுவ தடையைக் குறைப்பதில் விரைவான முன்னேற்றம் தேவைப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.